Wednesday, June 10, 2020

காசுவே Kasuve: யானைகளின் வருகை 18: முகாம் வந்தது பின்னே; ஊழல் வந்...

காசுவே Kasuve: யானைகளின் வருகை 18: முகாம் வந்தது பின்னே; ஊழல் வந்...: மே ட்டுப்பாளையத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தோலம்பாளையம். இங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோபனாரி கிராமத்த...

Tuesday, June 9, 2020

காசுவே Kasuve: யானைகளின் வருகை 17: காப்பாற்றப்பட்ட சிறூர் வலசை; ச...

காசுவே Kasuve: யானைகளின் வருகை 17: காப்பாற்றப்பட்ட சிறூர் வலசை; ச...: த மிழகத்திலேயே அதிக வனவிலங்குகள் நிறைந்த பகுதி தெங்குமரஹாடா என கருதப்படுகிறது . யானைகள் , புலிகள் , சிறுத்தைகள் , கருஞ் சிறுத...

காசுவே Kasuve: யானைகளின் வருகை 16: வலசைகளை அச்சுறுத்திய தெங்குமரஹ...

காசுவே Kasuve: யானைகளின் வருகை 16: வலசைகளை அச்சுறுத்திய தெங்குமரஹ...: '' அ ன்னைக்கு காந்தி கிடந்த கோலத்தைப் பார்த்து காட்டுக்குள்ளே போய் வந்த காட்டுவாசிக எல்லாம் பதறினாங்க . பத்தாக்குறைக...

காசுவே Kasuve: யானைகளின் வருகை 15: வாங்க காந்தியை காப்பாற்றுங்க!

காசுவே Kasuve: யானைகளின் வருகை 15: வாங்க காந்தியை காப்பாற்றுங்க!: ஓ ரிரு மாதங்களே ஆன பூங்குட்டி காந்தி.  அது வரும்போது பெயரிடப்படவில்லை. ஒரு காந்தி ஜெயந்தி நாளன்று சிறூர் வனப்பகுதியில...

காசுவே Kasuve: யானைகளின் வருகை 14 காப்பாற்றப்பட்ட மூர்த்தி; குற்ற...

காசுவே Kasuve: யானைகளின் வருகை 14 காப்பாற்றப்பட்ட மூர்த்தி; குற்ற...: நீதிமன்ற உத்தரவின்படி மக்னாவிற்கு சிகிச்சையளிக்க அயர்லாந்து டாக்டர் ஜேம்ஸ் மகோன்னி நியமிக்கப்பட்டார். மகோன்னியும், வக்கீல் ராஜேந்திரன...

காசுவே Kasuve: யானைகளின் வருகை 13:

காசுவே Kasuve: யானைகளின் வருகை 13:: ஈகோ சண்டையில் தவித்த முதுமலை மக்னா '' யா னைகள் எல்லாவற்றையும்தான் காட்டுக்குள் விரட்ட முயற்சித்தோம். அதில் இந்த ஒற்றை யான...

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 12. ஒரே மிதி; ஜீப் காலி !

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 12. ஒரே மிதி; ஜீப் காலி !: கள்ளிப்பட்டியில் மயிரிழையில் தப்பிய வனத்துறையினர்   ச ந்தனக்கடத்தல் வீரப்பன் என்றதும் சத்தியமங்கலம் காடுகளும் , அதில் தந...

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 11, ஆரநாட்டுக்காடு

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 11, ஆரநாட்டுக்காடு: கஜமுகனை கும்பிடப் போன  பிச்சைமணியை கொன்ற கஜமூர்க்கன்     பி ச்சைமணி காட்டுவேலை, செங்கல்சூளை வேலை என்று கிடைத்த வேலைக்கு போகும் கூல...

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 10. உயிர் பறிக்கும் தூமனூர் ஒற்ற...

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 10. உயிர் பறிக்கும் தூமனூர் ஒற்ற...: ஆ னைகட்டி, தூவைப்பதியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த இரண்டு குட்டியானைகளை மீட்டு சென்ற காட்டுயானைக்கூட்டத்தை பற்றி ஆரம்ப அத்தியாயங்களில...

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 9. காட்டுயானை வயிற்றடியில் ஒரு மண...

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 9. காட்டுயானை வயிற்றடியில் ஒரு மண...: தப்பிப் பிழைத்த புதுப்பதி பாப்பான் கதை உ ச்சி வெயில்   நேரம் . வானம் மப்பும் மந்தமுமாக இருந்தது . பாப்பண் கட்டைக் காலை ஊன்ற...

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 8. ரயில்வே VS வனத்துறை

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 8. ரயில்வே VS வனத்துறை: ‘‘ஆடி வெள்ளியன்னைக்கு உயிர்  உட்டுருக்கியே கணேசா!’’ கு ரும்ப பாளையத்தில் வயிற்றில் இருந்த குட்டியுடன் சேர்த்து 4 யானைகள் இறந்த சம்பவத்...

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 7. இப்படுபாதகத்திற்கு பொறுப்பேற்ப...

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 7. இப்படுபாதகத்திற்கு பொறுப்பேற்ப...: நவக்கரை ரயில் விபத்தில் இறந்த யானை, தண்டவாளத்தில் பொக்ளைன் இழுத்து செல்லும்போது...   இ ரவில் நடந்த சம்பவத்தில் யானைகள் இறந்தது மட்டும...

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 6. சிசுபாதகம்..

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 6. சிசுபாதகம்..: நள்ளிரவில் பிளிறி அடங்கின நான்கு ஜீவன்கள்...   எட்டிமடை அருகே ரயிலில் அடிபட்டு இறந்த யானை கு ட்டியானையும், அதை காப்பாற்றப் போன தாய் ...

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 5, ரயில் சக்கரத்தில் முதல் சோகம்

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 5, ரயில் சக்கரத்தில் முதல் சோகம்: புலி பாயும் மொட்டைப்பாறை..  பலியான தாயும் மகளும்... வாளையார் அருகே ரயிலில் சிக்கி இறந்த ஓர் ஆண் யானை கோவையின் தென் மேற்கே கேரள எல்...

காசுவே Kasuve: அத்தியாயம் 4 கொன்றது யானையல்ல!

காசுவே Kasuve: அத்தியாயம் 4 கொன்றது யானையல்ல!: ‘‘யானை தெரியாம கொன்னுடுச்சு;  ஃபாரஸ்ட்டுக்காரங்க தெரிஞ்சே கொன்னுட்டாங்க!’’ அ ந்த சிறுமி நித்யாவின் பெற்றோர் ஜெகதீசன்-சியாமளா சேலத...

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 3

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 3: கோவை குற்றாலத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... கோவை வனத்தில் ஒற்றை யானை அ ந்த யானை ஏன் அப்படி நடந்து கொண்டது? இன்னும் ஓரிரு அடி எட...

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 2, தூவைப்பதி மண்ணுக்காரன் தோட்ட ...

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 2, தூவைப்பதி மண்ணுக்காரன் தோட்ட ...: தண்ணீர் தொட்டியில் யானைகள் கோ வை மாவட்டத்திலும் அதற்கு அப்பால் மேற்கு கோடி எல்லைகளில் கேரளத்து மென்மை மணம் கமிழும்  மேற்கு தொடர்ச்சி ம...

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 1, மலைகிராமங்களில் ஒரு திகில் பயண...

காசுவே Kasuve: யானைகளின் வருகை: 1, மலைகிராமங்களில் ஒரு திகில் பயண...:   ‘அய்யோ.. யானை... யாராவது வாங்களேன்!’  ஊருக்குள் நுழையும் ஒரு காட்டு யானை ஊ ருக்கு ஒதுக்குப்புறமான சிறு கிராமம் பச்சாபள்ளி. புதர...

காசுவே Kasuve: யானைகளின் வருகை 17: காப்பாற்றப்பட்ட சிறூர் வலசை; ச...

காசுவே Kasuve: யானைகளின் வருகை 17: காப்பாற்றப்பட்ட சிறூர் வலசை; ச...: த மிழகத்திலேயே அதிக வனவிலங்குகள் நிறைந்த பகுதி தெங்குமரஹாடா என கருதப்படுகிறது . யானைகள் , புலிகள் , சிறுத்தைகள் , கருஞ் சிறுத...

Sunday, June 21, 2009

பிரும்மம்...

உள்ளே நுழையும் முன்...



இது ஓர் அனுபவத் தொடர்.

ந்த அனுபவங்கள் உங்களுக்கு வாய்த்திருக்கலாம்... வாய்க்காமலே கூட போகலாம். ஆனால் இதைப் படிக்கும் போது ஏதோ ஓர் அந்நியப்பட்ட விஷயத்தை வாசிப்பது போல் உணர மாட்டீர்கள்.

உங்களுக்குள் மூண்டு நிற்கும் கற்பனா உலகில் அனுபவப்பட்டு எழுந்து நிற்பது போலவே உணர்வீர்கள். அண்டவெளியும், பூமியும், அகப்புறச் சூழலும், இதில் வாழும் உயிர்களும் மனிதனுக்காக மட்டுமே படைக்கப்பட்டதல்ல

`வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கே வாழும் உயிருக்கெல்லாம்'! என்று கனவு கண்டானே பாரதி அந்த தீர்க்க தரிசனத்திற்காகவே! `அதன் வழி நகரும் இந்தத் தொடரின் ஆக்கம் எத்தனை காலம் நகருமோ நகரட்டும்' என்ற ஒப்புதலுடனே இது எழுதப்படுகிறது.

ந்த உருவம் கண்களை மூடி கடும் மௌனத்தில் ஆழ்ந்திருந்தது.

ஒரு கழுத்து, நான்கு தலைகள், எட்டு கண்கள் என்றிருந்த உடலெங்கும் ஊற்றெடுக்கும் வியர்வை அருவியாகி, ஆறாகி, கடலாகி ஆர்ப்பரிக்கிறது. என்றாலும் அந்த உருவத்தின் மௌனம் கலையவில்லை.

 அது வேறு யாருமல்ல! மானுடக்கற்பனா திறத்தில் அங்கிங்கெணாத படி விரிந்து நிற்கும் ஆர்ஷப்பாசறை கண்டெடுத்த படைப்புக் கடவுள் பிரும்மா...ஈரோழு லோகத்தில் சரசரக்கும் அண்ட சராசர உயிரின சிருஷ்டிக்கும் காணகர்த்தாவான கடவுளுக்கும் கூட வியர்க்குமா?

 இதில் என்ன ஆச்சர்யம்?

 மனிதன் படைத்த கடவுளுக்கு மனிதக்குணாம்சமும் கடவுளுக்கு மனிதக்குணாம்சமும் மானுட ஹிம்சையும், மனச்சலன உணர்வுகளும் வந்து தானே ஆக வேண்டும்? அது அவனின் ஜோடிக் கடவுளான கலைமகளுக்கும் பொருந்தும்தானே?

ஆம்!

அவனின் மௌனத்தைக் கலைக்கலாமா? வேண்டாமா என்கிற கவலை அவளுக்கு! இது பிரும்மனின் சாதாரண நிஷ்டையா? கடுந்தவக்கோலமா? தொட்டு விழிக்க வைத்தால் அவனின் சாபத்துக்கு ஆளாக நேருமா? என்று வெகுவாக அஞ்சினாள்.

 பிரம்மனை இப்படியொரு கோர கோலத்தில் சரஸ்வதி ஒருக்காலும் கண்டதில்லை.நெருப்புக்கோலகன் ஆதவன் உடைந்து நொறுங்கிதூள் தூளாகி அண்டவெளியில் எச்சத்துண்டங்கள் அக்னிக் கோளங்காக கோடானு கோடி மைல்கள் இடைவெளியில் உருண்ட போதும். கடைகோடி எச்சங்கள் கோடிகோடி மைல்கள் இடைவெளியில் குளிர்ந்து உருள, முதலிரண்டு கிரகங்கள் பெருநெருப்பாய் தகிக்க, கோடி கோடியே ஆண்டுகள் கழித்து மூன்றாம் கிரகமான பூமிப்பந்தில் புல், பூண்டு இலை தழைகளையும், புழு பூச்சி, நடப்பன, பறப்பன, ஊர்வன, சீறுவன என்ற உயிர்வகை வர்க்கங்களை சிருஷ்டித்து களைத்த போதும் பிரும்மன் இநத் வகை கோர கோலத்தில் இருந்ததில்லை.இங்கே ஏதோபிரளயம் தான் நடக்கப்போகிறது.

 ஆக்கம் மட்டுமே சக்தியாக வைத்திருந்த படைப்புக் கடவுள் இப்போது அழிக்கும் வேலையையும் கையில் எடுத்துவிட்டான்.

 பூலோகம் மட்டுமல்ல, இந்திரலோகம், சந்திரலோகம், தேவலோகம் இன்னுமுள்ள இத்தியாதி லோகங்களும் சுக்கல் சுக்கலாக வெடித்துச் சிதறத்தான் போகிறது. எண்ணிய மாத்திரத்தில் கல்விக் கடவுளுக்கு அச்சம் மிகுந்தது.

 ` ஓ ஈசனேஃ பெருமாளே! ஓடிவந்து இதைப்பாரீரோ`! என்று ஈரேழு லோகங்களும் அதிர இறைஞ்சினாள்.

 அவளின் கூப்பாட்டில் சிவனும், விஷ்ணுவும், மட்டுமல்ல தேவாதி தேவர்களும் பிரும்மலோகம் வந்து நின்றனர்.

 அத்தனைலோகத்து சக்திகளும் ஒரு பக்கமாய் குவிந்து நிற்க பிரம்மன் அமர்ந்திருந்த தாமரை மலர் ஒருபக்கமாய் சரிந்தது. அவ்வளவுதான் பிரும்மன் நடுங்கி விழித்தான். 

அவன் கண்கள் கோவைப் பழமாய் சிவந்து உருண்டன."பிரும்மனே! என்ன ஆயிற்று? ஏன் இப்படி கலைமகளை பயமுறுத்துகிறீர்கள்?"பிரும்மன் மலங்க, மலங்க விழித்தான் கொஞ்சம் கூடுதல் குழப்பத்தில் ஆழ்ந்தவன் எதையோ நினைத்தவனாய் உடல் சிலிர்த்தான்.

"ஈசனே! நீல வண்ணனே, ஏதோ கெட்டகனா போல் தான் இருந்தது.

 ஆனால் அது கனா அல்ல நிறும் தான் என்பது நிஷ்டையில் ஆழ்ந்த போது தான் தெரிந்தது!" என்று சொல்லிவிட்டு மீண்டும் எதையோ நினைத்து விட்டு நடுங்கினான்.

அலங்கார அகங்கார பூபதியான விஷ்ணுவுக்கோ எரிச்சல், உற்ற துணை கமலவேணிக்கோ குழப்பமோ குழப்பம்.

 " என்ன சொல்கிறாய் பிரும்மனே புரியும் படி சொல்!" கேட்டவன் விஷ்ணு.

‘‘சொல்கிறேன் கேளுங்கள் எனக்கு படைப்பதற்காண இறுதிக்காலம் நெருங்கி விட்டது. பூலோகத்தில் எத்தனை எத்தனையோ இயற்கைச் செல்வங்களைப் படைத்தேன். அதை உண்டு வாழ உயிரிகளையும் உருவாக்கினேன். கர்ண கடூர மிருகங்களையெல்லாம் என் சிருஷ்டிக்குள் அடக்கினேன். ஆனால் இப்போது வினோத உருவத்தைப் படைக்கப் போகிறேன். இந்த மிருகம் இயற்கைக்கெல்லாம் இயற்கை. மிருகத்துக்கெல்லாம் மிருகம். இது இயற்கையையும், மிருகத்தையும் என்னையும், ஏன் உங்களையும் கூட அழித்து தான் கடவுள் என்று கற்பனா முடி சூடிக்கொல்லும் இது அண்டத்தில் உருவான அத்தனை கிரகங்களையும் கடந்து சுக்கல் சுக்கலாக்கிப் பின் தானும் அழிந்துபோகும் அதைத் தான் உருவாக்கப்போகிறேன். அதற்குக் காலம் யுகங்களாகும். அதுவரை என்னை யாரும் தொந்தரவு செய்யாதீர்!"

மீண்டும் மௌனத்தில் ஆழ்ந்தான் பிரும்மன்.

அவனுக்குள் ஏதேதோ சிற்றுயிரிகள் காட்சிகளாக நகர்ந்தன ஒரு குட்டி உருவம் ஒற்றை வாலுடன் கோரப்பல் காட்டியது. கோடி ஆண்டுகள்

அது காடுகளில் ஓடியது கனவில் கைகளைப் பிசைந்தான் பிரும்மன். வாலில்லாத உருவம் பிறகு கோரமாய் எழுந்தது. கோரப்பல் கொண்டு, ராட்சஷக் கைகளை வீசி அனைத்து உயிரிகளையும் விரட்டியது. மீண்டும் இலகரங்களில் ஆண்டுகள் கழிந்தன. கழிந்து கொண்டேயிருந்தன.

 கோணல் மூக்கு நேராக, வளைந்த கைகள் இறுக்கமுடன் நீள, உடல் ரோமங்கள் சுருங்க, கூன் விழுந்த முதுகு நிமிர, மெல்ல மெல்ல அந்த உருவம் தன்னை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தது.

 இலைகளைப்பிடுங்கி உடுத்த கரங்கள், பூமியைப் பிளக்க ஆரம்பித்தது. நீளநீள கைகளை விரித்து ஆகாச மேகங்களையே கலக்கி ரசாயன மழை பொழிவித்தது. வானக் குடையின் கீழ்நின்ற அத்தனை உயிரிகளும் அலறின. படைத்தவன் எனவோ அவனே அலறினான்.

 "அடே மானுடா இதற்காகவா அவதரித்தாய்?"

 அந்தக் கூச்சல் வெளியில் பிரம்மனும் காணோம். அவனால் படைக்கப்பட்ட மனிதனும் காணோம். உலகம் இப்படித் தான் சர்வநாசம் ஆகப்போகிறது! என்கிற அசரீரி மட்டும் எங்கோ ஒலிப்பது போன்ற பிரமை.

...  இதைப் படிப்பவர்கள் இது என்ன குட்டிக் கதையா? அல்லது புராணக் கதையிலிருந்து தொடுக்கப்பட்ட சொற்கோவையா? என்று திகைக்கலாம்

அப்படியெல்லாம் எதுவுமேயில்லை.

நீங்கள் நல்லவராயிருக்கலாம், நான்கு விஷயங்களையும், சிந்திப்பவராய் இருக்கலாம். சமூக அவலத்தை புறத்திலும், அகத்திலும் ஆய்ந்து பார்த்து அத்தனை உயிரிகளையும் நேசிப்பவராய் இருக்கலாம். இவையெல்லா வற்றுக்கும் மேலாக!

இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது?

 மனிதன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? நானும் ஏன் இப்படி பொய்யும், புனைச்சுருட்டும் சொல்லி உண்மை எங்கே என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன்? என்று உள்ளூர கேள்விகளை அடுக்குகிறவராக இருக்கலாம்.

இப்படிப்பட்ட மனிதரா நீங்கள் நிச்சயம் நீங்கள் ஒரு நிமிடம் அவலம் குண்டு பொங்கும் போது, ஆவேசக் குரல் எழுப்பி போராடிக் கழித்தபின் கண்களை மூடி ஒரு கணம் தன்னை மறந்து சமூகம் நினைத்து தீர்க்கமாய் யோசித்தால்... நீள நீள நிமிடங்களாய் அந்த தீர்க்க தரிசனப்பாதையில் பயணித்தால் உங்களுக்கும் மேற் சொன்ன கற்பனா வினோத சங்கதிகள் மேலோங்கும்.

 அந்த சங்கதிகள் நல்லவையா? கெட்டவையா? என்பதை இச்சமூகம் தீர்மானிக்கும்.அப்படிப்பட்ட ஒரு நிலையில் உருவானதுதான் மேற்சொன்ன பிரும்மனின் கதை.

 அது உருவானதே ஒரு தன்னிலை மறந்த சூழல்...

2 யோகா என்றொரு ஜீவசமாதி!

தியானம், யோகா என்பதெல்லாம் சுயநல மிக்கது ஆன்மீகப் போர்வையைப் போர்த்துக் கொண்டு யோக்கிய வேஷம் போடுவது. அதனைப் பேணுபவனும், போதிப்பவனும் தனக்கே தனக்கென்று வாழ்பவன்.

 என் உடலும், என் மனமும் எக்கணத்திலும் இடறின்றி நகர வேண்டும். இடர்மிக்க உலகம் இப்படித்தான் இருக்கும். இதனுள் என் மனம் அமைதிப்பட்டால் இவ்வுடலுக்கு நோய் நொடிகள் அண்டாது.

 அப்படி நீயிருந்தால் நூறாண்டுகள் மட்டுமல்ல, அதற்கு மேலும் வாழலாம். எனக்குத் தெரிந்த போதனைகளையெல்லாம் எதிராளிக்கு போதித்து அவனையும் சுரணை கெட்டவனாக்கலாம்.

 இந்த சுரணை கெட்ட உலகம் ஒன்று கூடி நின்று, இதுதான் உலகு; அங்ஙனம் நீயும் வாழப்பழகு! என்று அஞ்ஞான உலகுக்கு உத்திரவிடலாம். யாருக்கு வேணும் அந்த ஞானிகளின் உலகு? என் மக்களிடமிருந்து நான் பிரிந்து நின்று அப்படி வாழ்வதற்குப் பதிலாக, முப்பது வயதில் மரணம் வந்தால் கூட செத்தொழியலாம்...

உள்ளத்தின் அடியாழத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தேன்.

 எதிரில் அந்த எழுபது வயது மதிக்கத் தக்க பெரியவர். என் பேச்சைக் கேட்டு கொஞ்சம் முகம் வெளிறிப்போயிருந்தார்.

"நான் உங்கிட்ட என்ன சொல்லீட்டேன் தம்பி? நல்லவன், கெட்டவனை நேரங்காலமில்லாமப் போய் பார்கிறவங்க நீங்க, ஊழல் அரசியல்வாதி, லஞ்ச அதிகாரி, போலிச் சாமியார், கேடி, பிக்பாட்கெட், மந்திரி, மகான்னு பலரையும் சந்தித்து பேசுவீங்க அவங்ககிட்ட நல்லது கெட்டது பகுத்தாராய்ஞ்சு எழுதி ஜனங்களுக்கு கொடுக்கிறவங்க

அப்படிப்பட்ட உங்களுக்கு மனசு சஞ்சலத்தின் உச்சத்தில் இருக்கும். பல விஷயங்கள் எழுத முடியாமல் இம்சை பண்ணும் ராத்திரி தூக்கம் வராம தவிப்பீர்கள். அந்த மனைச அடக்கியாளத்தான் தியானம் ஆழ்கடலின் அமைதி போல் மனம் அமைதி பெறவே யோகா! உங்கள் நல்லதுக்குத்தானே சொன்னேன். இது தப்பா? "

பரிதாபமாய் இருந்தது அவர் பார்வை, நான்கொஞ்சம் சாந்தமானேன்.

 ஒரு பேட்டி நிமித்தம் அந்தப்பெரியவரை அணுகினதில், அவர் என்னுடன் பேச்சு வாக்கில் வாய் கொடுத்து மாட்டிக் கொண்டார்.

 அவர் கடந்த 10 வருடங்களுக்கு மேல் தியானம், மற்றும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறராம். அதனால் மனமும், உடலும் அவருக்கு ஒரு சேர பேணப்பட்டு வருகிறதாம். அந்த அனுபவத்தை கொஞ்சமாக என்னிடம் சொல்லி நீங்களும் யோகா, தியானம் கற்றுக் கொள்ளலாமே! என்று கேட்கப் போய்த்தான் அவர் அகப்பட்டுக் கொண்டார்.

 அவர் பெரியவர் ஏதோ தனக்குத் தெரிந்த ஒன்றை நமக்கு சொல்லி விட்டார். அதற்காக அவரை இப்படியா வார்த்தையால் வதைப்பது?

நான் குரலைத் தாழ்த்திக் கொண்டேன்.

‘‘என்மேல் நீங்க அக்கறையுடன் பேசினதற்கு நன்றி ஐயா! நான் நீங்கள் நினைக்கிற மாதிரி ஒரு கூட்டுக்குள் அடங்குகிறவன் அல்ல. எனக்குள் ஒரு சமூக கொந்தளிப்பு இருக்கிறது. அந்தக் கொந்தளிப்பு என் மக்களின் வாழ்நிலை பற்றியது. ஒரு காலத்தில் எனக்கு சோறில்லையே என்று ஏங்கியதுண்டு, எனக்கு அது நிறைவுறக்கிடைத்தபோது என் குடும்பத்துக்கு இல்லையே என கலங்கிய துண்டு, அதுவும் நிறைவான பின் என் சகோதரர்களை, சகோதரிகளைப் பார்க்கிறேன். அவர்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என கவலையுறுகிறேன். நான் புறப்பட்டு வந்த இடத்தில் திரும்பிப் பார்க்கிறேன். அங்கெல்லாம் பசிப்பிணி, வறுமை வெக்கை, அங்கே ஒரு வேளை சோற்றுக்கு வயிற்றுக்குள் எத்தகைய கொந்தளிப்பு தெரியுமா? அந்த அக்னிச் சூடுதான் எனக்குள் விரவிக் கிடக்கிறது. அது எனக்குள் இருக்கும் வரைதான் அவர்களைப் பற்றி நான் சிந்திக்க முடியும் அவர்களின் மனோநிலையை எழுத்தென வரும் போது அதே கொந்தளிப்புடன் வெளிப்படுத்த முடியும். அந்தத் தீயை இந்த தியான நீர் கொண்டு யாரும் அனைத்து விடக்கூடாது என்பதில் உறுதிப்பாட்டுடன் இருக்கிறேன். அப்படி டஅதை அணைப்பதென்றால் முதலில் உங்கள் யோக கலைகளைப் பயன்படுத்தி இச்சமூகத்தின் வறுமைப் பிணியை அணைத்து விட்டு வாருங்கள். நான் உங்கள் தியான வேள்விக்குள் சங்கமிக்கிறேன்!"

அப்பெரியவர் என்னை ஒரு மார்க்க மாகத்தான் பார்த்தார்.

 இது மறை கழன்ற கேஸோ? என்று எண்ணினாரோ என்னவோ, ‘‘உங்க நல்லதுக்கு சொன்னேன். பிடிக்கலைன்னா விட்டுடுங்க என்று எழுந்து கொண்டார்." என் நல்லதுக்கு அது" என்பது அவரது பார்வை அவரின் அனுபவமாகக் கூட இருக்கலாம்.

 ஆனால் என்னுடைய அனுபவம் வேறு, அதை விவரிக்கிறேன். அது உங்களுடைய அனுபவமாகவே மாறக்கூடும்.கொங்கு மண்டலத்தின் மேற்கே அமைந்திருக்கும் மலைச் சாரலில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான யோக மையம் அது, ஈசனின் பெயரையும், ஏசுவின் நாமத்தையும், புத்தரின் போதனைகளை ஒருங்கே குழைத்து கடவுளாக்கி யோக நிலை சொல்லிக் கொடுக்கும் ஞானகுரு அவர்.

 அவர் ஒரு முதுகலைப் பட்டதாரி. தமிழ் தெரியாத வேற்று மாநிலத்தவர். மனைவியுண்டு. குழந்தையுண்டு, அவர் எப்படி யோகா நிலையில் நின்று கரைந்தாரோ?

தான் ஒரு அவராத புருஷர் என்று மக்களிடையே பறைசாற்றிக் கொண்டவர். நேரே மேற்சொன்ன மலைச்சாரலின் அடிவாரத்தில் குடில் அமைத்து உட்புகுந்தார். அவருக்கும், அவர் மனைவிற்கும் எங்கிருந்துதான் அத்தனை பிரபல்யம் வந்ததோ?

பெரிய பணக்கார யுவதிகளும், செல்வச் சீமான்களும் இவரின் குடிலுக்கு அமோகமாய் வந்து குவியத்துவங்கினர். குருஜியிடம் போய் யோகா கத்துகிட்டேன். அப்பயிருந்து தான் என் குடும்பமே சுபிட்சமாச்சு! என் தொழிலே ஏற்றமாச்சு! எனக்குள் இருந்த மிருகம் ஓடிப்போச்சு! என்றெல்லாம் அவர்கள் கூடிக் கலந்த வனவெளியில் சம்பாஷனைகள் சங்கமமிட்டன. 

அதன் தொடர்ச்சியாய் இன்னும்... இன்னும்... என அறிவு ஜீவிகளும், எழுத்தாளர்களும், பத்திரிக்கையாளர்களும் குவியத்துவங்கினர். குருஜியின் யோகா வகுப்புகள் அங்கிங்கெணாதபடி உலகம் முழுக்க பரவின. 

அதையொட்டி அவர் குடிலுக்கு வந்து குவிந்தவர்கள் எல்லாம் மிகப் பெரும் மில்லியனர்கள். சுவாமிஜியின் யோக வகுப்புகளுக்கு 13 நாள் போனால் போதும். மனம் அமைதி பெறுகிறது! என்று சொல்லி அதற்குக் கட்டணம் மட்டுமல்ல நன்கொடைகளாய் வாரியிரைத்தார்கள்.

இதனையடுத்து குருஜி வாசம் செய்த மலைச்சாரல் குடிலில் இரவு நேரங்களில் நாய்கள் ஊளையிட்டன. கரடிகள் உறுமின. நரிகளின் ஓங்காரமும், பிலியின் சீறலும், சிங்கத்தின் கர்ஜனையும், காடுகளைக் கிழித்தன. குகைவாழ் ஆதி வாசிகளும் திகைத்தனர்.

 இப்படி நானாவித மிருகங்களின் ஓசையை நாங்கள் வாழ்நாளில் கேட்டதேயில்லை என வனத்துறைக்கு தகவல் கொடுக்க, அவர்களும் வந்து குடிலில் நோட்ட மிட்டனர். மொட்டையடித்த சிஷ்ய கோடிகள் விசாரணை வலைக்குள் வந்து இங்கே அதிசயமாக ஒன்றும் நடப்பதில்லை

‘‘யோகா நிலையின் உச்சநிலையில் மனிதர்களுக்கு இப்படித்தான் முன் ஜென்ம ஞாபகங்கள் வரும் அவன் கரடியாகவோ, நாயாகவோ, நரியாகவோ, அப்போது பிறந்திருந்த பட்சத்தில் அந்த குணாம்சம் இப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் அதுதான் சமகால வாழ்க்கையில் அவனை முன்னேயும் போக விடாமல், பின்னேயும் நகர்த்த விடாமல் ஆட்டுவிக்கிறது. அப்படி மனிதனுக்குள் ஆட்டம் காட்டும் மிருகத்தைத்தான் சுவாமிஜி கண்டுணர்ந்து அகற்றுகிறார். அதில் வெளிப்படும் சப்தம்தான் அது!"

என்று புதிய வியாக்யானம் கொடுத்தனர்.

"யோகா என்பது இது தானோ? அந்த குருஜி அதி அற்புத சக்தி படைத்தவரோ? என்று அதிகாரிகளே குழம்பிப் போய் சிஷ்யை கோடிகளின் கால்களில் விழுந்து ஆசி பெற்று அப்போதைக்கு அகன்றனர்.நாட்கணக்கில் நடுநிசி நேரங்களில் அங்கே நானாவித மிருகங்களின் ஓசை ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. அப்படி ஒரு நாள் இரவு அங்கே ஒரு மர்ம மரணமும் நிகழ்ந்தது.

திட ஆரோக்யத்துடன் இருந்த சுவாமிஜியின் மனைவி திடீரென்று இறந்து போனார். அவள் ஜீவ சமாதியாகி விட்டாள். அப்படி யாவது தான் அவளது விருப்பம்! என்று கேஷுவலாகச் சொல்லி மாமனார்-மாமியாருக்குக் கூடச் சொல்லாமல் மனைவியை கட்டையை அடுக்கி எரித்து விட்டார் யோகாஜி.

எண்ணி சிலநாட்களில் புகார் கொடுத்து போலீஸுடன் வந்தார் சுவாமிஜின் மாமனார். இவன் மோசக்காரன் மெஸ்மெரிஷம், ஹிப்னாடிஸம் போன்ற வசியக் கலைகளைக் கற்றவன். அதில் என் மகளையும் ஆழ்த்தி அநியாயமாய் கொன்றுவிட்டான்! என்பது அவரின் குற்றச்சாட்டு.


3. புலி நக டாலரும் கிளப்பி விட்ட கதையும்...

"அவன் சாதாரண நபரில்லை, இண்டர்நேஷனல் கிரிமினல், அவனுக்கு உலகளவில் பணம் வருகிறது. தனது யோகா மையத்தில் அவன் நிர்வாணமாகத்தான் இருப்பான். அவனுடன் தன்னிலை மறந்த நிலையில் நிர்வாணமாகி இளம் பெண்களும் இருப்பார்கள். இதற்கெல்லாம் எதிர்ப்பாய் இருந்தாள் அவன் மனைவி, அதுதான் அவளை மெஸ்மெரிசத்தில் ஆழ்த்தி கொன்றுவிட்டான். இதை நான் சொல்லவில்லை. அந்த மையத்தைச் சுற்றி குடியிருக்கும் பழங்குடி மக்களைக் கேளுங்கள். அப்பாவி விவசாயிகளிடம் பேசுங்கள் அவர்கள் இன்னும் சொல்லுவார்கள்"

அவருக்கு நடுத்தர வயது கட்டுமஸ்தான தேகம். தடித்த கழுத்தில் கனமாய் புரண்ட மைனர் செயின் அதில் அதைவிட கூடுதல் கனத்தில் புலி நக டாலர். அதக்னற முகம், பருத்த மீசை, அச்சு அசலாய் ஆளைப் பார்த்தால் பழங்காலத் திரைப்படங்களில் வரும் ஜமீன்தாரைப் போல் இருந்தார்.அந்த ஊருக்குள் யோகாஜி பற்றி விசாரித்தால் நீங்கள் எங்களைக் கேட்பதை விட... அய்யாவைப் போய்க் கேளுங்கள் என்றே சொன்னார்கள்.

 அந்த அளவுக்கு அவர் தன் ஊரையே உள்ளங்கைக்குள் வைத்திருந்தார். ஊரும் அப்படி ஒன்றும் பெரிய ஊரில்லை ஒட்டு மொத்தமாய் ஐம்பது ஓட்டு வில்லை வீடுகள் இருந்தால் அதிகம், அதைவிட்டால் ஓரிரு பர்லாங் தொலைவுக்கு ஒரு தோட்டத்துச் சாலையும், தென்னந்தோப்புகளும், வயக்காடுகளும் தெரிந்தன.

அங்கிருந்து நான்கைந்து கி.மீ. தூரம் வனப்பகுதிக்குள் நடந்தாலே அந்த யோகாஜி ஆசிரமம் வரும். அந்த வனப்பிராந்தியத்தில் யானைகளுக்கும், இன்னபிற வனவிலங்குகளுக்கும் பஞ்சமில்லை. இத்தனை பகுதிக்கும் தனிக்காட்டு ராஜாபோல் இருந்தார் அவர்.

 யோகாஜி மீது அவர் மாமனார் வாரிப்பூசின கொலைக் குற்றச்சாட்டுக்கு அந்த மனிதர்தான் நீர் விட்டு வளர்ப்பவராக இருந்தார்.இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வந்த பத்திரிக்கையாளர்களிடம் பேச அந்தப் பகுதி போலீஸ் ஸ்டேஷனே கூட வாய்மூடி மௌனம் காத்தது.

 சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளோம். அது கூட வேற்று மாநில போலீசார் புகார் பதிவு செய்து எங்களுக்கு பார்வேர்டு செய்ததுதான். இங்கே கொலை நடந்ததற்கான அறிகுறியே இல்லை! என்று விசாரனை அதிகாரியே வியாக்யானம் கொடுக்க மேற்சொன்ன மனிதர் மட்டும் ஊருக்குள் மூலைக்கு மூலை தன் கையாட்களை நியமித்து ஊருக்குள் நுழையும் பத்திரிக்கையாளர்களை தன் வசம் அழைத்து வரச்செய்தார்.

 இஷ்டம் போல் விஷயங்களை நெருடல் இல்லாமல் அடக்கவும் ஆரம்பித்தார்.அப்படித்தான் அவர் எங்களையும் இழுத்து வைத்து பேசிக் கொண்டிருந்தார்.

‘‘அந்த ஆளுக்கு கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு என பலமொழிகள் தெரியும், அவனுக்கு இங்கே நிலம் வாங்கிக் கொடுத்ததே நான்தான். ரொம்ப யோக்யன் போல இருந்தான். தானும் தன் மனைவியும் விவசாயம் பார்க்கப்பபோறதா சொன்னான். நான் யோகா தெரிஞ்சவன். என் ஒய் புக்கும் அதுல ரொம்ப ஈடுபாடு அதை இங்குள்ள ஜனங்களுக்கெல்லாம் கத்துக் கொடுக்கப்போறேன்னான். ரொம்ப அப்பாவி போல பேசினான்னு நம்பினேன். என்னோட பூமியில ஒரு பகுதி நிலத்தை ரொம்ப குறைச்சல் விலைக்குக் கொடுத்தேன். அவனும் ஆரம்பத்துல பவ்யமாகத்தான் இருந்தான். நானும் அவன் கூட போய் யோகாவுல உட்கார ஆரம்பிச்சேன். காலப்போக்குல அவனை நாடி ஆந்திரா, கர்நாடகாவுல இருந்து பக்தர்க வர ஆரம்பிச்சாங்க, அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியான்னு கூட ஆட்கள் வர நானே குழம்பிப்போனேன். ரொம்ப நுட்பமா அதை கவனிச்சதுல நிறைய கடத்தல், பிஸினஸ் நடக்கற போக்கு தெரிஞ்சுது. நான் அந்த சாமியார எச்சரிச்சேன். எங்க ஊர் ரொம்பக் கட்டுப்பெட்டியான ஊர். ஏதாவது தப்பு தண்டா கண்டா ஜனங்களே விடமாட்டாங்க, ஒட்டுத் துணி கூட இல்லாம ஓட்டாண்டியாக்கி அடிச்சு விரட்டிடுவாங்க ஜாக்கிரதைன்னு எச்சரிச்சேன்.அவன் அதுக்கு துளிகூட மசியல, அதுக்குள்ளே அவன் பாரஸ்ட்டு ஆபீஸர்களை கைக்குள்ளே போட்டு வனத்துறைக்கு சொந்தமான பல ஏக்கர் பூமிய ஆக்கிரமிச்சிருந்தான் அக்கம் பக்கத்துல இருந்த ஆதிவாசிகளோட நிலங்களை யெல்லாம் நயமாபேசி பத்திரம் பண்ணீட்டான் விவசாயி கிட்டக்கூட அடிமாட்டு ரேட்டிக்கு பல விவசாயப் பகுதிகளை வளைச் சுட்டான். இந்த அக்கிரமங்களை செஞ்சதோட தனது பக்தர்கள் பலத்தையும் பெருக்கீட்டான். தன்னை நாடி வர்ற இளம் பெண்களையெல்லாம் சந்நியாசம் கொடுத்து சாமியாராக்கீட்டான். இதில் பாதிக்கப்பட்டவங்க சிலபேர் வந்து என்கிட்ட புகார் சொல்ல சாமியாரை நேரடியாகவே கண்டிச்சேன். ஆனா அவன் சன்னியாசம் அவங்கவங்கேளாட இஷ்டம்ன்னு ஒரே வார்த்தையில சொல்லிட்டான், எனக்கு அதுக்கு மேல மரியாதையில்லைன்னு விலகீட்டான். அப்புறம் நடந்தது தான் பெருங்கூத்து!’’

என்றவர் விவரித்த விஷயங்கள் நம்மையே திகீரிட வைத்தது.
தொடரும்...